மதுபான விற்பனை நிலையங்களை திறக்கவும் முடிவு

கொரோனா வைரஸ்  தடுப்பு நடவடிக்கைக்காக முன்னெடுக்கப்பட்டுள்ள  பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்க ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும்போது, உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொறுப்பான நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கு அமைய, கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் குறித்த அனுமதியை வழங்கியுள்ளார்.

ஊரடங்குச் சட்ட ஒழுங்குவிதிகள், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உட்பட கொரோனா வைரஸ் தடுப்புக்கான பாதுகாப்பு முறைகள் மற்றும் சுகாதார பரிந்துரைகளை பாதுகாக்கும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,  மதுபானத் தொழில் விதிமுறைகளை பேணுமாறும் அனைத்து கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் கபில  குமாரசிங்க தெரிவித்தார்.
 

Sun, 04/19/2020 - 16:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை