'கொரோனா சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுக்கும் வைத்திய அத்தியட்சகர்'

கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிக்க பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அத்தியட்சகர் ஒத்துழைக்க மறுப்பதால் கொரோனா அபாயம் நீங்கும் வரையில் குறித்த அத்தியட்சகரை பணியிலிருந்த நீக்கி வேறு ஒருவரை புதிதாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் வைத்தியர் காண்டிபன் தெரிவித்தார்.

இது தொடர்பக அவர் மேலும் கூறுகையில்,

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிராந்திய சுகாதார பணிமனைகளும் தற்போது சிறந்த முறையில் இயங்கி வருகின்றன. முக்கியமாக அதிலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகள் வீட்டையும் பராது கடமையின் நிமித்தம் தமது பிரச்சினைகளை மறந்து கடமையாற்றி வருகின்றனர்.

ஆயினும் கவலைக்குரிய விடயமொன்று என்னவெனில் முக்கியமான வைத்தியசாலைகளில் ஒன்றான பருத்திதுறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் எமக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்களின் அத்தியட்சகர் தம்முடன் சேர்ந்து செயலாற்றுவதற்கு நன்றாக ஒத்துழைக்கமாட்டார் என்று கடிதம் அனுப்பியுள்ளனர்.

அவர் நோயாளிகள் உள்ளே வருகின்ற போது அவர்களை பகுத்தாய்ந்து பிரித்தறிந்து நோயாளிகளை ஏற்று நடைமுறைப்படுத்த தனக்கு கஷ்டம் என்று கூறியுள்ளார். ஆகவே அங்கு வருகின்ற நோயாளிகளை சரியான முறையில் பராமரிப்பதுக்கு வைத்தியர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். முக்கியமாக அங்குள்ள வைத்தியர்கள் ஒரு குழு அமைத்து செயற்படுவதற்கும் அவர் மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஆயினும் அவர்கள் குழுவை அமைத்து தமது திட்டத்தை முன்மொழிந்து அத்தியட்சகருக்கு தெரியப்படுத்திய போதும் அவர் பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் அது இது செய்ய முடியாது என்றும் கூறியிருக்கின்றார்.

இது சம்பந்தமாக நாங்கள் மாகாணப் பணிப்பாளருக்கு தெரியப்படுத்தியுள்ளளோம். மாகாணப் பணிப்பாளர் அவருடைய ஆளணியுடன் சென்று பருத்தித்துறையில் ஒரு கூட்டத்தை ஏற்படுத்தியிருந்தார். ஆயினும் அந்தக் கூட்டத்தின் முடிவை இன்னும் தெரிவிக்கவில்லை என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர் 

Thu, 04/09/2020 - 06:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை