கிளினிக் போக முடியாத தோட்ட மக்களுக்கு மருந்துகள்

தோட்டங்களிலிருந்து கிளினிக் போக முடியாதவர்களுக்கு வீட்டுக்கே சென்று பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் குடும்பல நல உத்தியோகஸ்த்தர்கள் மருந்துகளை பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றினை அம்பகமுவ சுகாதார பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தோட்ட மக்களுக்கு தேவையான மருந்துகளை இவர்களிடமிருந்து கிளினிக் புததகத்தினை பெற்று  அருகிலுள்ள வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையினை சுகாதார பிரிவினர் ஆரம்பித்துள்ளனர். நேற்று வட்டவளை வைத்தியசாலையிலிருந்து பெற்றுக்கொண்ட மருந்துகளை உரியவர்களிடம் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் ஒப்படைத்ததார். இதன் போது மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 154 நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் ஒப்படைக்கப்பட்டதுடன் இல்லாத மருந்துகள் மருந்தகங்களில் (பாமசிகளில்) பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டன.

ஹட்டன் விசேட நிருபர்

Sat, 04/11/2020 - 07:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை