மேலும் 5 பேர் அடையாளம்; இலங்கையில் கொரோனா தொற்றியோர் 309

மேலும் 5 பேர் அடையாளம்; இலங்கையில் கொரோனா தொற்றியோர் 309-5 More COVID19 Cases Identified in Colombo12-Total Up to 309

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும், கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என, தெரிவிக்கப்பபட்டுள்ளது.

இன்று (21) முற்பகல் தேசிய தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவினால் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 304 இலிருந்து 309 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றையதினம் (20) அடையாளம் காணப்பட்ட 33 பேரில் 31 பேர், கொழும்பு 12, வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

அது தவிர பிலியந்தலை, பொரலஸ்கமுவ பகுதிகளிலிருந்து இருவர் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இது வரை பதிவான நோயாளர்களின் அடிப்படையில், நேற்றையதினம் (20) ஆகக்கூடுதலான கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் (33) கண்டுபிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, பண்டாரநாயக்க மாவத்தையில் கடந்த 7 நாட்களில் சுமார் 60 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின், தம்பதிவ சென்று வந்த குறித்த பகுதியைச் சேர்ந்த 59 வயதான பெண் ஒருவர் கடந்த மார்ச் 15 மாதம் சுகவீனமுற்ற நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு, தற்போது அப்பகுதியிலுள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை சோதனைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இதில் அடையாளம் காணப்பட்ட பெரும்பாலானோர் எவ்வித அறிகுறிகளும் இன்றியவர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, இன்றையதினம் (20) இது வரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 05பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குணமடைந்தவர்கள் தொடர்பில் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 309 பேரில் தற்போது 199 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு, சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 98 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் இது வரை 07 பேர் மரணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் தொடர்பிலான சந்தேகத்தின் அடிப்படையில் 122 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அடையாளம் - 309
குணமடைவு - 98

இன்று அடையாளம் - 05
இன்று குணமடைவு - 00

சிகிச்சையில் - 204
மரணம் - 07

மரணமடைந்தவர்கள் - 07
இலங்கையில் - 07

ஏப்ரல் 08 - ஒருவர் (07)
ஏப்ரல் 07 - ஒருவர் (06)
ஏப்ரல் 04 - ஒருவர் (05)
ஏப்ரல் 02 - ஒருவர் (04)
ஏப்ரல் 01 - ஒருவர் (03)
மார்ச் 30 - ஒருவர் (02)
மார்ச் 28 - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள் - 98
ஏப்ரல் 20 - 02 பேர் (98)
ஏப்ரல் 19 - 10 பேர் (96)
ஏப்ரல் 18 - 09 பேர் (86)
ஏப்ரல் 17 - 09 பேர் (77)
ஏப்ரல் 16 - 05 பேர் (68)
ஏப்ரல் 15 - 02 பேர் (63)
ஏப்ரல் 14 - 05 பேர் (61)
ஏப்ரல் 13 - 00 பேர் (56)
ஏப்ரல் 12 - 02 பேர் (56)
ஏப்ரல் 11 - 00 பேர் (54)
ஏப்ரல் 10 - 05 பேர் (54) 
ஏப்ரல் 09 - 05 பேர் (49)
ஏப்ரல் 08 - 02 பேர் (44)
ஏப்ரல் 07 - 04 பேர் (42)
ஏப்ரல் 06 - 05 பேர் (38)
ஏப்ரல் 05 - 06 பேர் (33)
ஏப்ரல் 04 - 03 பேர் (27)
ஏப்ரல் 03 - 03 பேர் (24)
ஏப்ரல் 02 - 00 பேர் (21)
ஏப்ரல் 01 - 04 பேர் (21)
மார்ச் 31 - 03 பேர் (17)
மார்ச் 30 - 03 பேர் (14)
மார்ச் 29 - 02 பேர் (11)
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 24 - 00 பேர் (02)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை - 309
ஏப்ரல் 21 - 05 பேர் (309)
ஏப்ரல் 20 - 33 பேர் (304)
ஏப்ரல் 19 - 17 பேர் (271)
ஏப்ரல் 18 - 10 பேர் (254)
ஏப்ரல் 17 - 06 பேர் (244)
ஏப்ரல் 16 - 00 பேர் (238)
ஏப்ரல் 15 - 05 பேர் (238)
ஏப்ரல் 14 - 15 பேர் (233)
ஏப்ரல் 13 - 08 பேர் (218)
ஏப்ரல் 12 - 11 பேர் (210)
ஏப்ரல் 11 - 02 பேர் (199)
ஏப்ரல் 10 - 07 பேர் (197)
ஏப்ரல் 09 - ஒருவர் (190)
ஏப்ரல் 08 - 04 பேர் (189)
ஏப்ரல் 07 - 07 பேர் (185)
ஏப்ரல் 06 - 02 பேர் (178)
ஏப்ரல் 05 - 10 பேர் (176)
ஏப்ரல் 04 - 07 பேர் (166)
ஏப்ரல் 03 - 08 பேர் (159)
ஏப்ரல் 02 - 03 பேர் (151)
ஏப்ரல் 01 - 05 பேர் (148)
மார்ச் 31 - 21 பேர் (143)
மார்ச் 30 - 05 பேர் (122)
மார்ச் 29 - 02 பேர் (117)
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 06 பேர் (78)
மார்ச் 20 - 06 பேர் (72)
மார்ச் 19 - 12 பேர் (66)
மார்ச் 18 - 11 பேர் (54)
மார்ச் 17 - 14 பேர் (43)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 02 பேர் (06)
மார்ச் 12 - 02 பேர் (04)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

இலங்கையில் கொரோனா நோயாளிகள் பதிவான இடங்கள்

Tue, 04/21/2020 - 12:08


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை