கோவிட் – 19 வைரஸ் பன்றிக்காய்ச்சலைவிட பத்து மடங்கு மோசமானது

உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகளாவிய சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியதில் இருந்து 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக 1.1 லட்சத்திற்கும் அதிகமானோர்  உயிரிழந்துள்ளனர். இதற்கிடையே, ஜெனீவாவில் நடந்த காணொளி கூட்டத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது  2009 இல் பரவிய பன்றிக்காய்ச்சலை விட 10 மடங்கு ஆபத்தானது.

அதனால் உலக நாடுகள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மெதுவாக உயர்த்த வேண்டும். கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்பதை நாங்கள் அறிவோம். எனவே, உலக நாடுகள் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களின் உயிரிழப்பை தடுக்க வேண்டும்’’ என்றார்.

Fri, 04/17/2020 - 10:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை