கொவிட்- 19 நிதியத்தின் வைப்பு ரூ. 848 மில்.ஆக அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு தற்போது 848 மில்லியனாக அதிகரித்துள்ளது.

பேராதனை, கெட்டம்பே ராஜோபவனாரமாதிபதி சங்கைக்குரிய கெப்படியாகொட சிறிவிமல தேரர் நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

லங்கா மினரல் சேன்ட்ஸ் நிறுவனம் 10 மில்லியன் ரூபா, ஜே.எச்.எம்.டீ. அபேசிங்க மற்றும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் தலா ஒரு மில்லியன் ரூபா, OPPO நிறுவனம் 1.2 மில்லியன் ரூபா,  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5.4மில்லியன் ரூபா, இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியப்படுத்தல் நிறுவனம் 6.2 மில்லியன் ரூபா மற்றும் இலங்கை தொழிநுட்ப அபிவிருத்தி சபை 05 லட்சம் ரூபாவும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 சுகாதார, சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும்.  காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும். 0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

Fri, 04/24/2020 - 09:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை