அமெரிக்க, பிரிட்டன் தூதுவர்கள் ஹக்கீமுடன் தொலைபேசியில் உரையாடல்

வெளிநாட்டு ராஜதந்திரிகள் இருவர் புதன் கிழமை(22),ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீமை தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர்.

அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி.டெப்லிட்ஸ் மற்றும் பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சரா ஹுல்டன் ஆகியோர் மு.கா. தலைவர் ஹக்கீமுடன் நாட்டின் தற்போதைய சமூக,அரசியல் சூழ்நிலை,சிறுபான்மையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள்,இங்கு  உலக அளவிலான கொவிட்-19 இன் தாக்கம் என்பனவற்றை மையப்படுத்திக் கலந்துரையாடியுள்ளனர்.

சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம், பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதில் ஏனைய நாடுகளிலிருந்து பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவம் என்பன பற்றியும் இங்கு பேசப்பட்டது.

எம்.ஏ.எம். நிலாம்

Fri, 04/24/2020 - 09:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை