முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மேலதிக அழைப்பு நேரம்

முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு மேலதிக அழைப்பு நேரம்-More talk time during curfew

தற்போது ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதன் காரணமாக தமது கையடக்க தொலைபேசி இணைப்புகளுக்கான சுரண்டும் அட்டைகளை அல்லது ரீலோட்களை பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ள முற்கொடுப்பனவு (Prepaid) வாடிக்கையாளர்களுக்கு அவசர கடன் மற்றும் மேலதிக அழைப்பு நேரத்தை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அனைத்து தொலைபேசி சேவை வழங்குனர்களும் இதற்கு இணங்கியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தகவலுக்கு அந்தந்த தொலைபேசி சேவை வழங்குனர்களை அணுகுமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

Sun, 03/22/2020 - 15:31


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக