யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் பூட்டு

உடன் அமுலுக்கு வரும் வகையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நேற்று (15) முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

சிவில் விமான சேவைகள் அதிகார சபை இது தொடர்பில் நேற்று அறிவித்தது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையம் தொடர்ந்து இயங்கும்.இருந்தாலும் சில விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்று (16) முதல் இரண்டு வாரக்காலத்திற்கு தற்காலிகமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.  

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.    யாத்திரைகளை தவிர எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு உள்ளூர் யாத்திரை, சுற்றுலா மற்றும் பயணங்களை தவிர்க்குமாறு புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.   அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.    நாட்டினுள் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு அதனை கட்டுப்படுத்தும் முகமாக பாதுகாப்பு நடவடிக்கையாக இந்த அறிவித்தல் விடுக்கப்படுவதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்திர கேரிக்கை விடுத்துள்ளார்.

Mon, 03/16/2020 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை