தட்டுப்பாடின்றி மருந்து வகைகளை பேண சுகாதார அமைச்சு நடவடிக்கை

கொரோனா வைரஸ் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக தட்டுப்பாடின்றி மருந்து வகைகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வைத்திய உபகரணங்களை மொத்தமாக வைத்திருக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, கட்டுப்படுத்த மற்றும்  சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வைத்திய உபகரணங்களை தட்டுப்பாடின்றி வைத்திருக்க தேவையான திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. அதற்காக சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள், பெண்கள் மற்றும் சிறுவர் நடவடிக்கைகள் மற்றும் சமூக பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் அண்மையில் கலந்துரையாடலொன்று சுகாதார அமைச்சின் நடைபெற்றது. 

வைத்திய வழங்கல் பிரிவின் அதிகாரிகள், அரச மருந்தாக்க கூட்டுத்தாபன அதிகாரிகள் மற்றும் வைத்திய பணிப்பாளர்களும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.  

விசேடமாக இங்கு கொரோனா வைரஸ் நோயை தடுத்தல், கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு வைத்திய உபகரணங்களை, முகக் கவசங்கள், கையுறைகள் மொத்தமாக வைத்திருப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.   அதற்காக அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் வைத்திய வழங்கல் பிரிவுக்கு தேவையான நிதியை விரைவில் வழங்கவும், உடனடியாக விலைக்கு வாங்குவதற்கு தேவையான அனுமதியை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு நாட்களும் அவற்றை விலைக்கு வாங்கி தேவைக்கேற்ப அவற்றை வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இக் கலந்துரையாடலில் சுகாதாரத் துறை செயலாளர் பத்ரானி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, அரச மருந்தக கூட்டுத்தாபன தலைவர் டொக்டர் பிரசன்ன குணசேன,வைத்தியசாலை பணிப்பாளர்கள் உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Mon, 03/16/2020 - 11:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை