டிரம்புக்கு வைரஸ் பாதிப்பு இல்லை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்று மருத்துவ பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாக வெள்ளை மாளிகை மருத்துவர் சீன் கொன்லி அறிவித்துள்ளார்.

“மருத்துவ சோதனையில் வைரஸ் தொற்றவில்லை என்பது இன்று மாலை உறுதியானது” என்று அவர் சனிக்கிழமை விடுத்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

டிரம்ப் தனது பிளோரிடா விடுதியில் பிரேசில் தூதுக் குழு ஒன்றை சந்தித்த சில தினங்களிலேயே இந்த மருத்துவ சோதனைக்கு முகம்கொடுத்துள்ளார். இந்த தூதுக் குழுவில் இருந்த சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது.

எனினும் இந்த சந்திப்புக்குப் பின்னர் 73 வயது டிரம்ப் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை. தமக்கு நோய் அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டது.

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை