அக்குரணை, அட்டுலுகம, கடையன்குளம் சீல் வைப்பு

அக்குரணை, அட்டுலுகம, கடையன்குளம் சீல் வைப்பு-Akurana-Atulugama-Kadayankulam Lockdown

கிராமத்திற்குள் நுழைவதும், வெளியேறுவதும் தடை

கண்டி மாவட்டத்தில் அக்குரணை, களுத்துறை மாவட்டத்தில் அட்டுலுகம கிராமங்கள் முற்றுமுழுதாக மூடி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

எவரும் அங்கு உள்நுழைவதோ அங்கிருந்து வெளியேறுவதோ தடை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றிய நபர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, புத்தளத்தின் கடையன்குளத்தின் ஒரு பகுதியில் உள்ள் பிரதேசங்களில் வாழ்வோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடையன்குளத்தின் ஒரு பகுதியிலுள்ள கிராமவாசிகளும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட விசேட தனிமைப்படுத்தல் நிலையத்தில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட்-19 எதிர்பாரா பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்தார்.

குறித்த பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயாளிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்றையதினம் (28) முதல் 14 நாட்களுக்கு அவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது தொடர்பில், அக்குரணை, அட்டுலுகம, கடயன்குளம் ஆகிய மூன்று கிராமங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

Sun, 03/29/2020 - 11:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை