இன நல்லுறவை வலுவூட்டும் நோக்கில் அபிவிருத்தி திட்டங்கள்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் இன நல்லுறவை வலுவூட்டும் நோக்கில் ஆலயத்தினூடாக திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இதன் முதல் கட்டமாக நேற்று (12) திருகோணமலை - தெவனிபியவர இந்ராராம விகாரையில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி அஹமட் அலி அல் முல்லாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மொரவெவ பிரதேச மாணவர்களின் கணனி அறிவை வலுவூட்டும் நோக்கில் கணனி கூடம், சிறார்களின் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் பாலர் பாடசாலை மற்றும் வறுமையில் வாழும் 500 பாடசாலை மாணவர்களை தேர்ந்தெடுத்து பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன. இலங்கையில் அனைத்து இன மக்களும் இன வேறுபாடின்றி ஒரே தாய் பெற்ற பிள்ளைகள் போல் வாழ்வதையே தமது நாடு விரும்புவதாகவும், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக பிளவுபடாமல் வாழவேண்டும் எனவும் இவர் வலியுறுத்தினார்.

திருகோணமலை மாவட்டத்தில் விஞ்ஞான பிரிவில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மூதூர் மீராசா பாத்திமா முஸாதிகாவுக்கு காசோலையும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மொரவெவ பிரதேச செயலாளர் பாத்திய விஐயந்த, மொரவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி ஜீ. வசந்த சந்ரலால் மற்றும் சிவில் பாதுகாப்பு படை கோமரங்கடவல பிரதேச பொறுப்பதிகாரி, ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

ரொட்டவெவ குறூப் நிருபர்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை