உடைந்துள்ள இறங்கு துறை; பயணிகள் அசெளகரியம்

குருமண்வெளி - மண்டூர் கிராமங்களுக்கு சேவையில் ஈடுபடும் இயந்திரப் படகின் இறங்கு துறையில் ஏற்பட்டுள்ள பாரிய உடைவினால் பயணிகள் பல்வேறு விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளதாக பிரதேச வாசிகளால் சுட்டிக்காட்டப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை சந்தியிலிருந்து எருவில்,

குருமண்வெளி ஊடாக குருமண்வெளி - மண்டூர் ஆகிய கிராமங்களுக்கு நீர் மார்க்கமாக சேவையில் ஈடுபடும் இயந்தியரப் படகு கரையை தட்டும் இடமானது உடைந்த நிலையில் காணப்படுவதனால் பயணிகள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.

மண்டூர், 14 ஆம் கிராமம், நாவிதன்வெளி, வெல்லாவெளி, அம்பிளாந்துறை, பட்டிப்பளை, நெடியவட்டை, ஆணைகட்டியவெளி, சின்னவத்தை, மாலையர்கட்டு ஆகிய கிராம மக்கள் மற்றும் பாடசாலை அலுவலகங்களுக்குச் செல்வோர் குறித்த இயந்திரப் படகு பாதையினையே பிரதான மார்க்கமாக பயன்படுத்துகின்றனர்.

வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பராமரிப்பில் இயங்கிவரும் இயந்திரப்படகு முறையாக இடம்பெற இறங்கு துறையிலுள்ள உடைவுகளை புனரமைத்துத் தருமாறு பிரதேசவாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மண்டூர் குறூப் நிருபர்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை