இஸ்ரேலில் மீண்டும் ஆட்சி அமைக்க நெதன்யாகு உறுதி

இஸ்ரேல் பாராளுமன்றத்துக்கு கடந்த வாரம் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், பிற கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிமைக்கப்போவதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சனிக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால் நான் பின்வாங்கப் போவதில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைத்தே தீருவேன்.

இஸ்ரேலுக்கு எதிராகச் செயல்படும் அரேபியர்களின் தலைமையிலான கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க எதிர்க்கட்சிகள் முயல்கின்றன. இந்தத் தேர்தல் வெற்றியை அந்தக் கட்சிகள் திருடிப் பெற நினைக்கின்றன என்றார்.

எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையிலேயே கடந்த வாரம் ஓர் ஆண்டில் 3ஆவது பொதுத் தேர்தல் நடைபெற்றது.

எனினும் ஆட்சியமைப்பதற்கு 61 இடங்கள் தேவைப்படும் நிலையில் நெதன்யாகுவின் லிகுட் கட்சிக் கூட்டணிக்கு 58 இடங்களே கிடைத்துள்ளன.

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை