அன்றாடம் தொழில் செய்பவர்களுக்கு நிவாரணப்பொதியொன்றை அரசு வழங்க வேண்டும்

கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுரைகளை பின்பற்றி பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்  எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனையிலுள்ள அவரது பிரத்தியேக அலுவலகத்தில் நேற்று (20) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கொரானா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி ஒரு முஸ்லிம் மரணித்தால் கூட இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்ய முடியாது. ஏனென்றால் இந்த நோயை எந்த வகையிலும் அலட்சியப்படுத்த முடியாது. இந்த நோய் பரவாமல் இருக்க மக்களை விழிப்புணர்வுடன் இருக்க அழைப்பு விடுக்கின்றேன் என்றும் தெரிவித்தார்.

அன்றாடம் தொழில் செய்து வருமானம் ஈட்டும் மக்களுக்கு  உணவு  நிவாரணப்பொதி ஒன்றினையாவது வழங்க  ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்வர வேண்டும் என அவர் வேண்டு கோள் விடுப்பதாகவும் மேலும் தெரிவித்தார்.

பாறுக் ஷிஹான்

Sat, 03/21/2020 - 13:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை