வேட்பாளர் போட்டியில் பைடன் நம்பிக்கை தரும் பெரு வெற்றி

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பை முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் அதிகரித்துக்கொண்டுள்ளார்.

ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்யும் தெற்குக் கரோலினா மாநிலத்திற்கான உட்கட்சித் தேர்தலில் பைடன் பெரு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் இடதுசாரியான பெர்னி சான்டர்ஸ் இரண்டாவது இடத்தை பிடித்தபோதும் இதுவரை நடைபெற்றிருக்கு நான்கு மாநிலங்களின் வாக்கெடுப்புகளின் படி அவரே முன்னிலையில் உள்ளார்.

இந்த வாக்கெடுப்புகளில் தீர்க்கமான 14 மாநிலங்களுக்கான சுப்பர் டியுஸ்டே வாக்கெடுப்புகள் நாளை நடைபெறவுள்ளன. நாளை வாக்கெடுப்புகளுக்கு பின் யார் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என்பது பற்றி தெளிவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

77 வயதான பைடன் உட்கட்சி வாக்கெடுப்பில் மாநிலம் ஒன்றில் வெற்றி பெற்றது இது முதல் முறையாக இருந்தது. “இந்த வேட்பாளர் முடிந்துவிட்டார் என்று ஊடகங்களும் புலமையாளர்களும் ஒருநாளைக்கு முன் கூறி வந்தார்கள். நாம் பெரும் வெற்றிபெற்றதற்கு ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறோம்” என்று அவர் வெற்றிக்குப் பின் ஆதரவாளர்களிடம் குறிப்பிட்டார்.

தெற்கு கரோலினாவில் பைடன் 48.4 வீத வாக்குகளை வென்றதோடு சான்டர்ஸ் 19.9 வீத வாக்குகளை கைப்பற்றினார். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில் ஏழு பேர் தொடர்ந்து போட்டியில் உள்ளனர்.

இதில் ஆரம்பக்கட்ட வாக்கெடுப்புகள் இடம்பெற்ற அயோவா, நியூ ஹாம்ஸ்பெயார் மற்றும் நெவாடாவில் பின்னடைவை சந்தித்த பைடன் தெற்கு மாநிலங்களில் முன்னேற்றத்தை எதிர்பார்த்துள்ளார்.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை