இலங்கையில் 6 கொரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர்

இலங்கையில் 6 கொரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்துள்ளனர்-No of people recovered and discharged from Coronavirus risen to 06

கடந்த 48 மணி நேரத்தில் புதிய நோயாளிகள் இனங்காணப்படவில்லை

கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூவர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி, COVID-19 நோயினால் பாதிக்கப்பட்ட 06 பேர் இது வரை குணமடைந்துள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (25) 24 வயதான ஒருவரும், கடந்த திங்கட்கிழமை (23) ஒருவரும் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.

அதற்கமைய சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 06 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

மேலும் 237 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 48 மணி நேரத்தில் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குணமடைந்தவர்கள்
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 26 - 00 பேர் (102)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

26.03.2020 (00 பேர்)
102 - 102

25.03.2020 (00 பேர்)
102 - 102

24.03.2020 (05 பேர்)
98 - 102

23.03.2020 (10 பேர்)
88 - 97

22.03.2020 (09 பேர்)
79 - 87

21.03.2020 (05 பேர்)
78. விபரம் அறிவிக்கப்படவில்லை
77. விபரம் அறிவிக்கப்படவில்லை
76. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
75. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
74. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்

20.03.2020 (13 பேர்)
61 - 73. விபரம் அறிவிக்கப்படவில்லை

19.03.2020 (07 பேர்)
60. விபரம் அறிவிக்கப்படவில்லை
59. விபரம் அறிவிக்கப்படவில்லை
58. விபரம் அறிவிக்கப்படவில்லை
57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்
54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி

18.03.2020 (11 பேர்)
43 - 53. விபரம் அறிவிக்கப்படவில்லை

17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை
41. விபரம் அறிவிக்கப்படவில்லை
40. விபரம் அறிவிக்கப்படவில்லை
39. விபரம் அறிவிக்கப்படவில்லை
38. விபரம் அறிவிக்கப்படவில்லை
37. விபரம் அறிவிக்கப்படவில்லை
36. விபரம் அறிவிக்கப்படவில்லை
35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
33. களனியைச் சேர்ந்தவர்
32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
22. 37 வயது ஆண்
21. 50 வயது ஆண்
20. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண் (குணமடைந்தார்)

27.01.2020 (ஒருவர்)
1. சீன பெண் ஒருவர் (குணமடைந்தார்)

Thu, 03/26/2020 - 18:33


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக