4 இலட்சம் கிலோ பெரிய வெங்காயம் இந்தியாவிலிருந்து உடன் இறக்குமதி

தட்டுப்பாட்டை போக்க அரசு ஏற்பாடு; 150 ரூபா நிர்ணய விலை

பெரிய வெங்காயத்துக்கான நிர்ணய விலையாக 150 ரூபாவை அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் பெரிய வெங்காயத்துக்கான நிர்ணய விலை 190 ரூபாவாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அது 150 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்தது.

கடந்த சிலதினங்களாக பெரிய வெங்காயத்திற்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவிய நிலையில் நேற்று முன்தினம் 4 இலட்சம் கிலோ பெரிய வெங்காயம் இந்தியாலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக

புறக்ேகாட்டை மொத்த வர்த்தக மற்றும் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது.

இந்தியா பெரிய வெங்காயத்திற்கு விதித்திருந்த ஏற்றுமதித் தடையை நீக்கியதையடுத்து முதல் தடவையாக இந்த வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்தது. இதே வேளை நேற்று முதல் 150 ரூபாவிற்கு பெரிய வெங்காயமும் 450 கிராம் மீன்ரின் 100 ரூபாவிற்கும் பருப்பு கிலோ 65ரூபாவிற்கும் சதொச மூலம் விற்கப்படுவதாக சதொச பிரதம நிறைவேற்று அதிகாரி துஸ்மந்த தொடவத்த தெரிவித்தார்.

நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதற்கிணங்க நேற்றைய தினம் சந்தைகளில் 160 ரூபாய் சில்லறை விலைக்கு பெரிய வெங்காயம் விற்கப்பட்டதைக் காணக்கூடியதாகவிருந்தது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை