தெற்காசியாவில் வேகமாக பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்ைக

தென்கிழக்காசியாவில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராட ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தேவைப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறுகிறது.

தென் கிழக்காசிய பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் பல நாடுகள் தமது எல்லைகளை மூடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாடசாலைகளை மூடியும் விளையாட்டு நிகழ்சசிகளை இரத்துச் செய்தும் சில சந்தர்ப்பங்களில் இரவு நேர ஊரடங்கு சட்டத்தை அமுல் செய்தும் உள்ளன.

பிராந்தியத்தில் உள்ள சில  நாடுகளில் பொதுச் சுகாதார முறைமைகள் வலுவிழந்து காணப்படுவதால் இவ்வாறான நோய்ப்பரவலை எதிர்கொள்ள முடியாமல் உள்ளது. இந்நிலையில் மேலும் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் நாங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் பூனம் கெட்ரபல் சிங் கூறுகிறார். தென் கிழக்காசியாவில் அதிக அளவில் கொரோனா வைரசினால் பீடிக்கப்பட்டவர்கள் மலேசியாவில் காணப்படுகின்றனர். அங்கு 673 பேர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை