கொரோனா தொற்றிய 11 ஆவது நபர்; ஜேர்மனியிலிருந்து வந்தவர்

கொரோனா தொற்றிய 11 ஆவது நபர்; ஜேர்மனியிலிருந்து வந்தவர்-11th COVID19 Patient Identified-Came From Germany

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் இன்றையதினம் (15) அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அந்த வகையில் ஜேர்மனியிலிருந்து வந்த 45 வயதான ஆண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட, ஜேர்மனி பயணம் செய்த குழுவிலிருந்து நபரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தற்போது IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் தொற்றிய 11 பேர் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

15.03.2020
11. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனியிலிருந்து வந்தவருடன் பயணித்தவர்: 45 வயது ஆண்ி

14.03.2020
10. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
9. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
3. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்
4. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்

12.03.2020
2. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020
1. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண்
(இது தவிர கடந்த 27.01.2020 அன்று அடையாளம் காணப்பட்ட சீன பெண் ஒருவர்)

Sun, 03/15/2020 - 18:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை