விடுமுறை; சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசியம்

விடுமுறை; சுகாதாரம், உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசியம்-All services including health declared essential service despite tomorrow (16) being declared a holiday

நாளை (16) பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும் சுகாதார சேவைகள் உள்ளிட்ட ஏனைய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக கருதி எவ்வித இடையூறுகளுமின்றி மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் COVID-19 தொற்றுநோய் காரணமாக, நாளையதினம் (16) பொது விடுமுறை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார சேவைகளை அத்தியாவசியமான சேவையாக கருதி மேற்கொள்ளுமாறு, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடுன் அத்தியாவசிய சேவைகளான மின்சாரம், நீர் விநியோகம் உள்ளிட்ட பொது மக்களுக்கான சேவைகளும் இடையூறின்றி இடம்பெறும் என, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்தார்.

தமது அமைச்சில் ஊடகங்கள் மத்தியில் இன்று (15) காலை கருத்து தெரிவித்தார்.

அத்துடன் அத்தியாவசிய பணிகளுக்காக மாத்திரம் அரச அலுவலகங்களுக்கு வருமாறு அமைச்சர் பொது மக்களிடம் கேட்டுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கலந்துரையாடி தேவையாயின் மாத்திரம் வரமுடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரச மற்றும் வங்கி விடுமுறை தினமாக நாளை அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்தும் நீடிக்கவேண்டிய தேவை எற்பட்டால் மாத்திரமே நீடிக்கப்பபடும் என்று அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு விசேட சுற்றறிக்கை அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sun, 03/15/2020 - 18:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை