மேலும் இருவர் அடையாளம்; கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 115

2 More COVID19 Patients Identified total Up to 115

4 இலங்கையர் இது வரை மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நேற்று (28) இரவு 11.30 மணியளவில் மேலும் 02 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 113 இலிருந்து 115 ஆக அதிகரித்துள்ளது.

அதற்கமைய நேற்றையதினம் (28) மொத்தமாக 09 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் முதலாவது கொரோனா மரணம் நேற்று (28) பதிவானது.

60 வயதான மாரவிலவைச் சேர்ந்த ஒருவர் மரணமடைந்திருந்தார்.

இதேவேளை, லண்டனில் இரு இலங்கையர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வத்தேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான, லல்ஷேன் விஜேரத்ன எனும், லண்டனின் பெல்தமில் வசித்து வந்த ஒருவர் நேற்று மரணமடைந்தார்.

அத்துடன் 70 வயதான ஓய்வு பெற்ற வைத்தியர் ஒருவரும் லண்டனில் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த 25ஆம் திகதி யாழ்ப்பாணம், புங்குடுதீவைச் சேர்ந்த 59 வயதான சதாசிவம் லோகநாதன் என்பவர் சுவிட்சர்லாந்தில் உயிரிழந்தார்.

அதற்கமைய உலகளாவிய ரீதியில் இலங்கையர் 3 பேரும், இலங்கையில் ஒருவரும் என 4 இலங்கையர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளமை அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அடையாளம் - 115
குணமடைவு - 09

கண்காணிப்பில் - 199
சிகிச்சையில் - 106

மரணம் - 01

மரணமடைந்தவர்கள் (04)
இலங்கையில்
மார்ச் 28 - ஒருவர் (01)
வெளிநாட்டில்
இலண்டனில் - 02 பேர் (03)
சுவிஸ்லாந்தில் - ஒருவர் (01)

குணமடைந்தவர்கள்
மார்ச் 28 - 02 பேர் (09)
மார்ச் 27 - ஒருவர் (07)
மார்ச் 26 - 03 பேர் (06)
மார்ச் 25 - ஒருவர் (03)
மார்ச் 23 - ஒருவர் (02)
பெப் 19 - 01 (சீனப் பெண்)

கொரோனா தொற்றியவர்களின் எண்ணிக்கை
மார்ச் 28 - 09 பேர் (115)
மார்ச் 27 - 00 பேர் (106)
மார்ச் 26 - 04 பேர் (106)
மார்ச் 25 - 00 பேர் (102)
மார்ச் 24 - 05 பேர் (102)
மார்ச் 23 - 10 பேர் (97)
மார்ச் 22 - 09 பேர் (87)
மார்ச் 21 - 05 பேர் (78)
மார்ச் 20 - 13 பேர் (73)
மார்ச் 19 - 07 பேர் (60)
மார்ச் 18 - 11 பேர் (53)
மார்ச் 17 - 13 பேர் (42)
மார்ச் 16 - 10 பேர் (29)
மார்ச் 15 - 08 பேர் (19)
மார்ச் 14 - 05 பேர் (11)
மார்ச் 13 - 03 பேர் (06)
மார்ச் 12 - ஒருவர் (03)
மார்ச் 11 - ஒருவர் (02)
ஜனவரி 01 - ஒருவர் (சீனப் பெண்) (01)

28.03.2020 (09 பேர்)
107-115

27.03.2020 (00 பேர்)
106

26.03.2020 (04 பேர்)
103 - 106

25.03.2020 (00 பேர்)
102

24.03.2020 (05 பேர்)
98 - 102

23.03.2020 (10 பேர்)
88 - 97

22.03.2020 (09 பேர்)
79 - 87

21.03.2020 (05 பேர்)
78. விபரம் அறிவிக்கப்படவில்லை
77. விபரம் அறிவிக்கப்படவில்லை
76. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
75. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்
74. அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர்

20.03.2020 (13 பேர்)
61 - 73. விபரம் அறிவிக்கப்படவில்லை

19.03.2020 (07 பேர்)
60. விபரம் அறிவிக்கப்படவில்லை
59. விபரம் அறிவிக்கப்படவில்லை
58. விபரம் அறிவிக்கப்படவில்லை
57. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
56. இத்தாலியிலிருந்து வந்து தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில இருந்த நபர்
55. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மகள்
54. கொரோனா தொற்றுக்குள்ளான மாணிக்க வர்ததகரின் மனைவி

18.03.2020 (11 பேர்)
43 - 53. விபரம் அறிவிக்கப்படவில்லை

17.03.2020 (13 பேர்)
42. விபரம் அறிவிக்கப்படவில்லை
41. விபரம் அறிவிக்கப்படவில்லை
40. விபரம் அறிவிக்கப்படவில்லை
39. விபரம் அறிவிக்கப்படவில்லை
38. விபரம் அறிவிக்கப்படவில்லை
37. விபரம் அறிவிக்கப்படவில்லை
36. விபரம் அறிவிக்கப்படவில்லை
35. கட்டாரிலிருந்து வந்த உடுகம்போல பிரதேசத்தைச் சேர்ந்தவர்: 25 வயது
34. மாராவில பிரதேசத்தைச் சேர்ந்தவர்
33. களனியைச் சேர்ந்தவர்
32. இங்கிலாந்திலிருந்து வந்தவர்
31. ஜேர்மனி சுற்றுப் பயணம் மேற்கொண்டவருடன் தொடர்புபட்டவர்
30. இரண்டாவதாக அடையாளம் காணப்பட்ட சுற்றுலா வழிகாட்டியின் மனைவி

16.03.2020 (10 பேர்)
29. இந்தியாவின் கேரளாவிலிருந்து வந்த இலங்கையர்
28. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
27. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
26. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
25. தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் இருந்தவர்
24. பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்
23. கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 73 வயது ஆண்
22. 37 வயது ஆண்
21. 50 வயது ஆண்
20. 13 வயது சிறுமி

15.03.2020 (08 பேர்)
19. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
18. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
17. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
16. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
15. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
14. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
13. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: ஆண்
12. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட ஜேர்மனி பயணத்தில் இணைந்து பயணித்தவர்: 45 வயது ஆண்

14.03.2020 (05 பேர்)
11. கொரோனா தொற்றுக்குள்ளானவரின் உறவினர்: 17 வயது சிறுமி
10. இத்தாலியிலிருந்து வந்த பெண்; 56 வயதான பெண்
9. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 42 வயது ஆண்
8. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
7. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 44 வயது ஆண்

13.03.2020 (03 பேர்)
6. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 43 வயது ஆண்
5. இத்தாலியிலிருந்து நாடு திரும்பி, கந்தக்காடு முகாமில்: 37 வயது ஆண்
4. ஜேர்மனியிலிருந்து நாடு திரும்பியவர் : 41 வயது ஆண்

12.03.2020 (ஒருவர்)
3. சுற்றுலா வழிகாட்டியுடன் தங்கியிருந்தவர் : 44 வயது ஆண்

11.03.2020 (ஒருவர்)
2. இத்தாலி சுற்றுலா பயணிகளின் சுற்றுலா வழிகாட்டி: 52 வயதான ஆண் (குணமடைந்தார்)

27.01.2020 (ஒருவர்)
1. சீன பெண் ஒருவர் (குணமடைந்தார்)

Sun, 03/29/2020 - 08:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை