லேக்ஹவுஸ் முற்போக்கு ஊழியர் சங்கம் சி.ஐ.டி யில் நேற்று முறைப்பாடு

சுவிஷ் தூதரக கடத்தல் நாடகம்

லேக்ஹவுஸ் முன்னாள் தலைவர் உள்ளிட்ட மேலும் சிலருக்கும் தொடர்பு

சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா பெனிஸ்டருடன் தொடர்பு வைத்திருந்த லேக்ஹவுஸ் முன்னாள் தலைவர் கிரிஷாந்த கூரே, முன்னாள் சண்டே ஒப்சேவர் ஆசிரியர் தரீஷா பஸ்ரியன் ஆகியோருடன் தொடர்பு வைத்திருந்த மேலும் சிலர் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி சி.ஐ.டி யில் முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது. பொதுஜன பெரமுனவுடன் இணைந்த லேக்ஹவுஸ் முற்போக்கு ஊழியர் சங்கம் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளது.

சங்க தலைவர் சந்தன பண்டார, செயலாளர் திஸ்ஸ தம்மிக உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த முறைப்பாட்டை நேற்று கையளித்தனர்.

''கானியாவின் கடத்தல் நாடகத்துடன் தொடர்புள்ள மேலும் சிலர் உள்ளனர்.

லேக்ஹவுஸ் முன்னாள் தலைவரும் ஒப்சேவர் முன்னாள் ஆசிரியையும் தற்பொழுது சுவிட்சர்லாந்தில் வாழ்கின்றனர்.கடத்தல் நாடகத்திற்கு உதவிய சிலர் லேக்ஹவுஸில் பணிபுரிகின்றனர்.வெளியிலும் சிலர் உள்ளனர்.

இவர்கள் தொடர்பில் துரிதமாக விசாரணை நடத்த வேண்டும். இல்லாவிடின் அவர்களும் வெளிநாட்டுக்கு தப்பி விடுவார்கள்'' என சந்தன பண்டார தெரிவித்தார்.

ஒப்சேவர் பத்திரிகை இணையாசிரியையாக செயற்பட்டவரிடமே, தரீஷாவின் மடிக்கணினி இருக்கிறது.

அதனை சேதமாக்கி பயன்படுத்த முடியாதவாறு வைத்துள்ளனர்.

அதனை கைப்பற்றி அதிலுள்ள தகவல்களை பெற வேண்டும்."ரெச" பத்திரிகையுடன் தொடர்புள்ள சிலரும் விசாரிக்கப்பட வேண்டும். எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பிரஜாவுரிமை தொடர்பிலான வழக்கு லேக்ஹவுஸில் இருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது.

இங்கு த.தே.கூ மற்றும் ஐ.தே.க எம்.பிக்கள் வந்து சென்றுள்ளனர். இது தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும்.

தூதரகங்களுடன் தொடர்புள்ள ஊடகவியலாளர்கள் சிலர் லேக்ஹவுஸில் பணியாற்றியுள்ளதோடு அவர்களுக்கு இங்கிருந்தே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.இவர்கள் உளவு பார்க்கும் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர்.(பா)

Tue, 02/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை