எகிப்து மத்தியஸ்தர்கள் காசா பகுதிக்கு விரைவு

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில் அதனை தணிக்கும் முயற்சியாக எகிப்து தூதுக் குழு ஒன்று காசாவுக்கு விரைந்துள்ளது.

இஸ்ரேல் மற்றும் காசாவில் ஆட்சியில் உள்ள பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸுக்கு இடையே எகிப்து நீண்டகாலமாக மத்தியஸ்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. எனினும் தற்போதைய விஜயம் பற்றி மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

தெற்கு காசா பகுதியில் ஹமாஸின் பல இலக்குகள் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்றும் தாக்குதல் நடத்தின.

ஹமாஸ் பயிற்சி வளாகம் ஒன்று மற்றும் இராணுவ உட்கட்டமை ப்பு ஒன்றும் இலக்கு வைக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையிலான அமைதித் திட்டம் ஒன்றை வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தப் பதற்றம் அதிகரித்துள்ளது.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை