ஜனாதிபதி தேர்தலைப்போல் பொது தேர்தலையும் அடிப்படைவாதத்திற்கு எதிரானதாக்குவோம்

அடிப்படைவாதத்தை வென்ற ஒரு தேர்தலாக கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதலாம்.பொதுத் தேர்தலிலும் அடிப்படை வாதத்தை ஒழிக்க எம்முடன் இணையுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று முதலீட்டு

ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

கண்டி திகன பிரதேசத்திலுள்ள அம்பகோட்டை விகாரையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களது ஏக பிரதிநிதி தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று அதன் உறுப்பினர்கள் கூறி வருவதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

அரசியல் ரீதியில் வீழ்ச்சி அடைந்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதை ஒரு புறம் வைத்து விட்டு தங்களுக்குள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளக் கூட அவர்களால் முடியாதுள்ளது.

அரசு வழங்கிய அபிவிருத்திப் பணிகளை கைவிட்டு அவர்கள் பாணியிலான நிர்வாகத்தையே முன்னெடுத்தார்கள். பிரபாகரனின் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை பிரபாகரனது குரலாக இந்தே செயற்பட்டனர்.

பாராளுமன்றில் நாம் ஆற்றும் உரைகளை பிரபாகரனுக்கு வழங்கியவர்களாக குறிப்பிட முடியும்.

யுத்தத்தால் அடைய முடியாத சுயாட்சி எண்ணக்கருவை பேனையால் பெற்றுக் கொள்ள முயற்சிக்கும் ஒரு கூட்டமும் உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அடிப்படைவாதிகள் தம்மால் வாக்குகள் பெற்றுத் தரமுடியும் எனக் கூறினர்.

இருப்பினும் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் முன் செல்லக் கூடிய ஒரு தலைமை எமக்குக் கிடைத்த படியால் அடிப்படை வாதிகளின் உதவி எமக்குத் தேவைப்படவில்லை.

கடந்த தேர்தலில் பிரபாகரன் எந்தப் பிரதேசங்களை தமது நிஜபூமியாகத் தெரிவித்ததாலோ அந்தப் பிரதேசங்களில் மட்டுமே சஜித் பிரேமதாசவினால் வெற்றி கொள்ள முடிந்தது.

அடிப்படை வாதத்தை வென்ற ஒரு தேர்தலாக கடந்த ஜனாதிபதித் தேர்தலைக் கருதலாம்.

அடுத்த பொதுத் தேர்தலிலும் அடிப்படைவாதத்தை வென்ற ஒரு தேர்தலாக மாற்றியமைக்கும் படியும் அதற்காக எம்முடன் இணையும் படியும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அக்குறணை குறூப் நிருபர்

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை