ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு; அரபா இல்லம் முதலிடம்

ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் நாற்பத்தெட்டாவது இல்ல விளையாட்டுப் போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டிகளில் அரபா இல்லம் (நீலம்) 287 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், ஹிறா இல்லம் (பச்சை) 286 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், சபா (சிவப்பு) 194 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

இதன்போது மாணவர்களது கராத்தே சாகச கண்காட்சி, பேன்ட் குழுவினரின் கண்காட்சி, அணிநடை கண்காட்சி, உடற்பயிற்சி கண்காட்சி மற்றும் மைதான நிகழ்ச்சி என்பன இடம்பெற்றதோடு, மாணவ படையணியினரினால் அதிதிகள் செங்கம்பலம் விரித்து வரவேற்கப்பட்டனர்.

பாடசாலையின் நாற்பத்தெட்டாவது இல்ல விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு அதிதிகளால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், அதிதிகளால் சமாதான புறா பறக்க விடப்பட்டது.

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை