கல்முனை உவெஸ்லியில் தில்லையம்பலம் இல்லம் சம்பியன்

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப்போட்டி (11) கல்லூரி முதல்வர் எஸ்.கலையரசன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் கலந்துகொண்டார்.

அத்துடன் பாடசாலையின் ஓய்வுநிலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

இங்கு நல்லதம்பி இல்லம், தில்லையம்பலம் இல்லம், வில்சன் இல்லம், யோகம் இல்லம் ஆகிய நான்கு இல்லங்களுக்கு இடையில் விளையாட்டுப்போட்டிகள் இடம்பெற்றன.

இவ் இல்லவிளையாட்டுப்போட்டியின் போது சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொண்டு பதக்கம் பெற்று நாட்டக்கும் பிரதேசத்திற்கும் பெருமைதேடித்தந்த சேனைக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கராத்தேவீரர் எஸ்.பாலூராஜ் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இங்கு நடைபெற்ற போட்டிகளில் தில்லையம்பலம் இல்லம் 521புள்ளிகளைப்பெற்று முதலாம் இடத்தையும், வில்சன் இல்லம் 442புள்ளிகளைப்பெற்று இரண்டாம் இடத்தையும், நல்லதம்பிஇல்லம் 366புள்ளிகளைகப் பெற்று மூன்றாம் இடத்தையும், யோகம் இல்லம் 347 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக்கொண்டது.

இப்போட்டியில் மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சி அதிதிகளையும் பார்வையாளர்களையும் கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை