எல் சால்வடோர் இராணுவம் பாராளுமன்றத்தில் முற்றுகை

சிறந்த ஆயுதங்களை பெறுவதற்காக 109 மில்லியன் டொலர் கடனுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி எல் சால்வடோர் பாராளுமன்றத்தை அந்நாட்டு இராணுவம் மற்றும் பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

ஜனாதிபதி நயிப் புகேலே எம்.பிக்களிடம் உரை நிகழ்த்தும்போதே படையினர் பாராளுமன்றத்திற்கு நுழைந்துள்ளனர். இந்தக் கடன் திட்டத்தை அங்கீகரிப்பதற்கு ஏழு நாள் கால அவகாசத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

படையினர் பாராளுமன்றத்திற்கு நுழைந்தது முன்னெப்போதும் நிகழாத ஒரு மிரட்டல் செயல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர்.

உலகில் அதிக கொலைச் சம்பவம் பதிவாகும் நாடுகளில் ஒன்றாக எல் சால்வடோர் உள்ளது. நாடெங்கும் உள்ள குற்ற கும்பல்களால் இவ்வாறான கொலைகள் பதிவாகின்றன.

கடந்த 2019 ஜுன் மாதம் ஜனாதிபதியாக பதவி ஏற்ற புகேலே, குற்ற கும்பல்களின் வன்முறைகள் மற்றும் ஊழலை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளார். படையினருக்கு சிறந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குதற்காக கடன் பெறும் திட்டத்தை அவர் அறிமுகம் செய்திருந்தார்.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை