சிரிய அகதிகளின் அவலம் குறித்து கடும் எச்சரிக்கை

ரஷ்யா மற்றும் ஈரான் போராளிகளின் ஆதரவுடன் வடமேற்கு சிரியாவில் அரசபடை நடத்திவரும் தாக்குதல்கள் அங்கு முன்னெப்போதும் இல்லாத பேரழிவை ஏற்படுத்தும் என்று உதவிப் பணியாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அரச எதிர்ப்பாளர்களின் கடைசி கோட்டை மீது அரச படை நடத்திவரும் இந்தத் தாக்குதல்களால் கடந்த இரண்டு வாரங்களில் நிலைமை மிக வேகமாக மோசமடைந்திருப்பதாக உள்ளூர் மனிதாபிமான பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் இத்லிப் மற்றும் அலெப்போ மாகாணங்களின் வடக்கு மற்றும் மேற்கை நோக்கி பெரும் எண்ணிக்கையான மக்கள் தஞ்சமடைந்து வரும் நிலையில் அவர்களை கையாள்வதில் உதவிப் பணியாளர்கள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

“இங்கு கடந்த ஆண்டை விடவும் நிலைமை 20 மடங்கு மோசமடைந்துள்ளது. 1.2 மில்லியன் இடம்பெயர்ந்த மக்கள் உள்ளனர்” என்று சிரிய தொண்டு அமைப்பு ஒன்றில் பணியாற்றும் ஒபைதா டன்டூஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் மோதல் உக்கிரமடைந்தது தொடக்கம் பெண்கள் மற்றும் சிறுவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சுமார் 586,000 பேர் இடம்பெயர்ந்திருப்பதாக ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

வடமேற்கில் அரச எதிர்ப்பாளர்கள் பகுதியை நோக்கி சிரிய அரச படை 2018 ஆம் ஆண்டு தொடக்கம் முன்னேற்றம் கண்டு வருகிறது.

Tue, 02/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை