திருவள்ளுவர் சிலை கையளிப்பு

காரைதீவில் இம்மாத இறுதியில் நிறுவப்படவிருக்கும் தெய்வப் புலவர் திருவள்ளுவர் பெருமானின் திருவுருவ கற்சிலையை இந்தியா தமிழ்நாட்டின் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் ம.பா.க.பாண்டியராசன் சம்பிரதாயபூர்வமாக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறிலிடம் வழங்கி வைத்தார்.

திருச்சியில் 'தமிழ்நாடு தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை' நிறுவனர் பெருங்கவிஞர் உடையார்கோயில் குணா தலைமையில் சம்பிரதாயபூர்வமாக இந் நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வில் கலந்துகொள்வதற்காக காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் கடந்த வாரம் தமிழ்நாடு சென்றிருந்தார்.

அங்கு இடம்பெற்ற எளிமையான நிகழ்வில் பலபேராளர்கள் பங்கேற்றனர்.

அங்கு வள்ளுவப்பெருமான் சிலைகளுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்ற பின்னர் அமைச்சர் பாண்டியராசன் ஊடகங்கள் முன்னிலையில் கருத்துத் தெரிவித்து சம்பிரதாயபூர்வமாக சிலையை தவிசாளர் ஜெயசிறிலிடம் கையளித்தார்.

300 திருவள்ளுவர் சிலைகளை உலகம் பூராக நிறுவும் திட்டத்தின் கீழ் உடையார் கோயில் குணா இலங்கையில் உரும்பிராயிலும் காரைதீவிலும் இரு சிலைகளை நிறுவவுள்ளார்.

இதில் யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 21ஆம் 22ஆம் 23ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இரண்டாவது உலகத்திருக்குறள் மாநாட்டையடுத்து நிறுவப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரைதீவு குறூப் நிருபர்

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை