அரசு நெல் கொள்வனவு; அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பம்

பெரியநீலாவணை விசேட நிருபர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலைக்கமைய விவசாயிகளிடமிருந்து நெல்கொள்வனவு செய்யும் புதிய வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் 06 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை - பெரியநீலாவணை பிரதேசத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம்.அப்துல் லத்தீப் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

அரசாங்கத்தின் இந்த புதிய வேலைத்திட்டம் பற்றி விவசாயப் பணிப்பாளர் விளக்கமளித்த போது,.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறிமுறைக்கமைய அரசாங்கத்தினால் வியசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள பிரதேசங்கள் உட்பட அதிகாரமளிக்கப்பட்ட 15 முகவர் நிலையங்கள் இதற்கென தெரிவு செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ நெல் 50.00 ரூபாவிற்கு அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்படும். ஈரலிப்பான நெல் 44.00 ரூபாவிற்கு பெறப்படும். அதேவேளை விவசாயி ஒருவரிடமிருந்து ஆகக்கூடுதலாக எண்ணாயிரம் கிலோ (8000Kg) நெல் கொள்வனவு செய்யப்படும். ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்த விவசாயிடம் ஆயிரம் கிலோவும், ஒன்று தொடக்கம் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்தவரிடமிருந்து மூவாயிரம் கிலோவும், மூன்று தொடக்கம் ஐந்து ஏக்கர் வேளாண்மை செய்தவரிடம் இருந்து எண்ணாயிரம் கிலோவும் உச்ச எல்லையாக கொள்வனவு செய்யப்படும்.

கொள்வனவு செய்யப்பட்ட நெல்லுக்குரிய பணங்களை எந்த வித தங்குதடையுமின்றி அரச வங்கிகளினூடாக விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பல்வேறு பாதிப்புக்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

Sat, 02/08/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை