பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் அடுத்த மாதம் ஆரம்பம்

2019/2020 பருவகால பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகள் இப்போது நடைபெற்று வருகின்றன. இதனையடுத்து பாடசாலைகளுக்கிடையிலான பிக் மெட்ச் எனும் பாரிய கிரிக்கெட் போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பிக்கும். இந்நிலையில் அடுத்த மாத ஆரம்பத்தில் மேற்படி பாரிய போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் தமது விருப்பத்துக்குரிய பாடசாலை கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளை ஆதரிக்கும் ஆயிரக்கணக்கான பாடசாலை கிரிக்கெட் ரசிகர்கள் ஒப்சேர்வர்- மொபிடெல் சிறந்த பாடசாலை வீரர்கள் போட்டிகளை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஒப்சேர்வர்- - மொபிடெல் சிறந்த பாடசாலை வீரர் விருது வழங்கலின்போது ஒரு விருதையேனும் வெற்றி பெறுவது பாடசாலைகளில் கிரிக்கெட் விளையாடும் அனைத்து வீரர்களினதும் கனவாகும். அத்துடன் கடந்த சில வருடங்களாக சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீராங்கனைக்கும் விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கிரிக்கெட் உலகில் பிரபல்யம் பெற்ற வீரர்கள் தாங்கள் சில வருடங்களுக்கு முன்னர் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கலில் விருது வென்றமை தமக்கு மறக்க முடியாத நிகழ்வாக இருப்பதாக கூறுகின்றனர். தாங்கள் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கு ஆரம்பமாக இருந்தது அந்த விருது வெற்றி பெற்றதாகும் என்று கூறுகின்றனர்.

1978/1979 இல் இடம்பெற்று வரும் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை ரஞ்சன் மடுகல்ல முதல் அர்ஜுன ரணதுங்க வரை பெற்றுள்ளனர். குறிப்பிட்டுச் சொல்வதனால் பாடசாலை வீரர்களிடையே ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருது வழங்கல் நிகழ்வு ஒரு தாய் நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

இந்த பிரபல்ய விருதை, முதன் முறையாக 1978/1979 இல் வெற்றிபெற்றவர் அப்போது ரோயல் கல்லூரியில் மாணவனாக இருந்த ரஞ்சன் மடுகல்ல ஆவார். ரோயல் கல்லூரி அணியின் தலைவராக மட்டுமன்றி என். சி.சி. கழகத்தையும், இலங்கை தேசிய அணியிலும் தலைவராகியமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 42 வருடங்கள் இந்த நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருவதையிட்டு லேக் ஹவுஸ் நிறுவனமும் சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையும் பாராட்டப்படவேண்டும் என்று ரஞ்சன் மடுகல்ல கூறுகிறார்.

கடந்த காலங்களில் உயர் மடட விருதுகளை வென்ற பாடசாலை வீரர்கள் பெரும்பாலும் கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்தே வந்தனர்.

எனினும் தற்போது வெளி மாவட்ட பாடசாலை வீரர்களும் முன்னணியில் இருப்பது கிரிக்கெட் விளையாட்டு வெளி மாகாணங்களுக்கு சிறப்பாக பரவியுள்ளதையே காட்டுகிறது என்று ரஞ்சன் மடுகல்ல கூறுகிறார்.

இப்போது இவர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தின் போட்டி தீர்ப்பாளராக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு உலக கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த தலைவர் அர்ஜுன ரணதுங்க, ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை 1980 மற்றும் 82 இல் வென்றவர். 1978 முதல் இந்த போட்டியை நடத்தி வருவது சிறப்பு. இதன்மூலம் பாடசாலை கிரிக்கெட் வீரர்கள் பெரிதும் ஊக்குவிக்கப்படுகின்றனர். அதேநேரம் வடக்கிலுள்ள பாடசாலைகளில் உள்ள வீரர்களும் இந்த போட்டியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்று அர்ஜுன ரணதுங்க கூறுகிறார்.

வெளி மாவட்டங்களில் கிரிக்கெட் இப்போது மிகவும் உற்சாகமாக விளையாடப்படுகிறது. இலங்கையில் பிரபல்யம் பெற்ற வீரர்களில் பலர் ஒப்சேர்வர் விருதை வென்றவர்கள் தான் என்று அர்ஜுன மேலும் கூறுகிறார்.

1985 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர் அசாங்க குருசிங்க, அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

1983 மற்றும் 84 இல் எனது பாடசாலையான நாலந்த கல்லூரியை சேர்ந்த ரொஷான் மகாணாம இரண்டு தடவைகள் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றபோது அவ்வாறான ஒரு விருதை வெல்வது எவ்வளவு பெருமைக்குரியது என்பதை நான் நன்கு உணர்ந்துகொண்டேன். இது அனைவருக்கும் வெற்றிபெற முடியாத ஒரு விசேட விருது. ஒரு பருவகாலம முழுவதும் தொடர்ந்து திறமைகாட்டி வந்தால்தான் இந்த விருதை வெல்ல முடியும். மிகவும் சிரமப்பட்டால் தான் பாடசாலை கிரிக்கெட்டின் உச்சம் தொட முடியும் என்று அசங்க குருசிங்க கூறுகிறார்.

1996 உலக கிண்ணத்தை வெற்றிபெறுவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியர் சனத் ஜயசூரிய. இவர் ஒப்சேர்வர் – மொபிடெல் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரருக்கான வெளி மாகாண விருதை 1988 இல் வெற்றிபெற்றவர். ஒப்சேர்வர் விருதை வென்ற பெருமையை நான் மட்டுமல்ல எனது பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள், பயிற்சியாளர்கள் பாடசாலை ஆசிரியர்கள் என அனைவருமே அந்தப் பெருமையில் பங்குகொண்டோம். நான் அந்த வருடம் விருதை வென்றதும் இலங்கை அணிக்காக தெரிவாகும் வாய்ப்பு நெருங்கிவிட்டதாக உணர்ந்தேன் என்று கூறுகிறார்.

குமார் தர்மசேன 1989 முதல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை வீரர் விருதை வென்றார். ஒரு பாடசாலை வீரருக்கு அவ்வாறான மதிப்புடன் கூடிய விருது வழங்கப்படும்போது அவர் நீண்டதூரம் செல்லும் வாய்ப்பை பெறுகிறார். அந்த அணியை சாடிய நாம் மிகவும அர்ப்பணிப்படுடன் செயற்பட்டோம் என்று குமார் தர்மசேன கூறுகிறார்.

1990 இல் ஒப்சேர்வர் சிறந்த பாடசாலை கிரிக்கெட் வீரர் விருதை வென்றவர் மார்வன் அத்தபத்து, ஆனந்த கல்லூரிக்காக விளையாடிய போதுதான் ஒப்சேர்வர் விருது எனக்கு கிடைத்தது. அந்த விருதுதான் என்னை இலங்கை அணிவரை அழைத்துச் சென்றது என்று மார்வன் அத்தபத்து கூறுகிறார்.

Wed, 02/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை