ஸாஹிரா கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி: அறபா இல்லம் சம்பியன்

கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் 2020ம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள் (21) வெள்ளிக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ஐ. ஜாபிர் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் பேண்ட் இசைக் குழுவினரால் அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசிய கீதம், பாடசாலைக் கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் கலந்து கொண்டார்.

இதில் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், முன்னாள் ஓய்வுபெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் மருதூர் ஏ. மஜீத், கல்முனை வலய கல்விப் பணிமனையின் உதவிப் பணிப்பாளர் என்.எம்.மலிக், முன்னாள் கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். இஸ்மாயில், கண் வைத்திய நிபுணர் டாக்டர் எம்.எம்.ஏ.ஏ.றிஷாத், மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அஸீம். எம்.ஐ.மனாப் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், உயர் அதிகாரிகள், வர்த்தக பிரதிநிதிகள், ஏனைய பாடசாலை அதிபர்கள், உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் கராத்தே மற்றும் இல்லங்களின் அணி வகுப்பு நிகழ்வுகள் என்பன பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றது.

2020ம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் அறபா இல்லம் (நீலம்) 303 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், சபா இல்லம் (பச்சை) 278 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், மர்வா இல்லம் (சிவப்பு) 231 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் ஹிரா இல்லம் 182 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

சாய்ந்தமருது தினகரன் நிருபர்

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை