83ஆவது பொலிஸ் மெய்வல்லுநர் போட்டி

இலங்கை பொலிஸ் மெய்வல்லுநர் போட்டிகள் இம் மாதம் 26 ஆம் திகதி ஆரம்பமாகி நேற்றுடன் (28) பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் வெகு விமர்சையாக முடிவடைந்துள்ளது. 83 ஆவது தடவையாக நடாத்தப்படும் இவ் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் இறுதி வைபவத்தில் பிரதம அதிதியாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் விஷேட அதிதியாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

58 பொலிஸ் பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தி நான்காயிரத்துக்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் போட்டியிட்டனர். 26 ஆம் திகதி ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாகின. ஆரம்ப வைபவத்தின் பிரதம அதிதியாக பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன கலந்துகொண்டார்.

போட்டிகளுக்கு மேலதிகமாக 9 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி பாடசாலை மாணவர்களின் அஞ்சல் ஓட்டப்போட்டிகள் இடம்பெற்றன.

முதலாவது மெய்வல்லுநர் போட்டி 1902 ஆம் ஆண்டு கொழும்பு குதிரைத்திடல் மைதானத்தில் இடம்பெற்றதுடன் இப்போட்டியை ஆரம்பித்து வைத்ததன் பெருமை அப்போதைய சிலோன் பொலிஸ் என அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கைப் பொலிஸின் நான்காவது பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய மேஜர் எப். நொலிஸ் அவர்களையே சாரும். 1வது மெய்வல்லுநர் போட்டிகளில் சிறந்த வீரருக்கு வழங்கப்பட்ட விருது மெய்வல்லுநர் போட்டிகளின் ஆரம்ப கர்த்தாவாகிய மேஜர் எப். நொலிஸ் அவர்களின் பெயரிலேயே வழங்கப்பட்டுள்ளது. 1902 ஆம் ஆண்டு தொடக்கம் வருடம் தோறும் பம்பலப்பிட்டி பொலிஸ் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.

Sat, 02/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை