கஸ்ஸாலி இல்லம் சம்பியனாக தெரிவு

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் போது அதிகூடிய புள்ளிகள் பெற்றுக் கொண்ட கஸ்ஸாலி இல்லம் 2020 ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கஸ்ஸாலி, சீராஸி, பிர்தொளஸி ஆகிய இல்லங்களிடையே நடைபெற்ற பெரு விளையாட்டுக்கள், மெய் வல்லுநர் போட்டி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் திறமை காட்டிய கஸ்ஸாலி இல்லம் 324 புள்ளிகள் பெற்றுக் கொண்டு சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

293 புள்ளிகள் பெற்றுக் கொண்ட சீராஸி இல்லம் இரண்டாமிடத்தினையும், 264 புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட பிர்தௌஸி இல்லம் மூன்றாமிடத்தினையும் பெற்றுக் கொண்டது.

குடந்த மூன்று வார காலமாக இல்லங்களை பிரதிநிதித்துப் படுத்திய மாணவர்களிடையே நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளின் இறுதி நாள் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் அதிபர் மௌலவி யூ.எல்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் மாணவர்களுக்கும் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தார். விளையாட்டின் மூலம் சமாதானத்தினை கட்டியெழுப்பும் வகையில் சமாதானப் புறாக்களும் இதன்போது அதிதிகளால் பற்றக் விடப்பட்டன.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அஹமட் சக்கி உள்ளிட்ட கல்வியியலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், துறைசார் முக்கியஸ்தர்கள், பாடசாலைச் சமூகத்தினர் என இதன்போது பலர் கலந்து கெண்டனர்.

மாணவர்களின் அணி நடைப் பயிற்சிக் கண்காட்சி, விநோத உடைப் போட்டி நிகழ்ச்சிகள், மாணவர்களின் சாகச நிகழ்வுகள் போன்றன மக்கள் மத்தியில் பெரு வரவேற்பினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(அட்டாளைச்சேனை தினகரன் நிருபர்)

Fri, 02/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை