தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் விக்கினேஸ்வரன் இணைய வேண்டும்

தமிழ் மக்களிற்கு கூட்டமைப்பொன்று அவசியம். ஆனால் தற்போதைய கூட்டமைப்புக்கள் எவையும் பொருத்தமற்றது.

எனவே தமிழ் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட விக்கினேஸ்வரன் முன்வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், தமிழர் விடுதலைக் கூட்டணியானது தமிழர்களது உரிமைகளிற்காக போராடுகின்ற ஒரு கட்சியாகவும், ஐம்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட ஒரு கட்சியாகவும் உள்ளது. தற்போதைய கூட்டமைப்புக்கள் தங்களை பாதுகாப்பதற்காகவே கூட்டு சேர்ந்துள்ளன. கூட்டணியிலே இருக்கும் விக்னேஸ்வரன் நீண்ட காலம் நீதிதிதுறையிலே செயற்பட்ட ஒரு நேர்மையானவர்.

ஆனால் அவர் இணைந்திருக்கின்ற கூட்டுக்கள் பொருத்தமற்றன. அவர் ஒரு தரம் குறித்த கூட்டு தொடர்பில் ஆராய்ந்து பார்க்க வேண்டும். நானாக இருந்தால் ஒருமுறை குறித்த கூட்டு தொடர்பில் கவனம் செலுத்தியிருப்பேன்.

இந்நிலையில் விக்னேஸ்வரன் புதிதாக அமைத்துள்ள குறித்த கூட்டணியையும், ஏனைய கட்சிகளும் ஒற்றுமையாக செயற்படுவதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். 2004ஆம் ஆண்டு காலத்தில் இவ்வாறான ஒரு சூழலே காணப்பட்டது.

அன்றும் அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து ஒரு கூட்டாக செயற்பட வேண்டிய நிலை காணப்பட்டது. இன்றும் அவ்வாறான சூழல் காணப்படுகின்றது என்றார்.

பரந்தன் குறூப் நிருபர்

Sat, 02/15/2020 - 09:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை