நீர்ப்பாசன பொறியியலாளர் கட்டடம் திறந்துவைப்பு

முல்லைத்தீவு முத்தயன்கட்டு பிரிவுக்கான நீர்ப்பாசன பொறியியலாளர் பணிமனை அலுவலக கட்டடம் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் பி.ஏஸ்.எம்.சாள்ஸினால் திறந்து வைக்கப்பட்டது.

முத்தயன்கட்டு நீர்ப்பாசன பொறியியலாளர் பிரிவானது 3 பாரிய மற்றும் 5 நடுத்தர குளங்களில் 13,645 ஏக்கர் விவசாய நிலப்பரப்புகளையும் 4,514 பயனாளிகளையும் கொண்டு விவசாயத்திற்கும் மக்களுக்கும் சேவையாற்றி வருகின்றது.

இந்த திணைக்களம் பல்வேறு தேவைப்பாடுகளுடன் இயங்கி வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் 15 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் நிரந்தர கட்டடம் நிர்மாணிக்கும் பணி ஆரம்பித்து வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் இரண்டாம் கட்டமாக பணிகளை மேற்கொள்வதற்கான 2019ஆம் ஆண்டு பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியின் கீழ் ரூ 5.3 மில்லியன் ஒதுக்கீட்டில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

மாங்குளம் குறூப் நிருபர்

Tue, 02/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை