ஐ.தே.க ஆதரவாளர்கள் அரசுடன் இணைய முன்வர வேண்டும்

தலைவரின்றி ஐ.தே.கட்சி பல கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதால் அக்கட்சியில் தொடர்ந்தும் தரித்து நிற்காமல் நாட்டினதும் தமது எதிர்கால சுபீட்சத்தையும் கருதி பொது ஜன பெரமுனவுடன் இணையுமாறு ஐ.தே.க ஆதரவாளர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று தகவல் தொலைத் தொடர்பு தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

மாத்தறையில் அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துதெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் கலைந்துசெல்லாமல் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்க ஐக்கிய தேசிய கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இன்று பாராளுமன்றத்தை கலைத்தாலும் மார்ச் இரண்டாம் திகதி கலைத்தாலும் பாராளுமன்றத்துக்கு வந்துள்ள புதிய உறுப்பினர்களின் ஓய்வுப் பணம் அற்றுப்போகும்.

ஓய்வுப் பணத்தை மட்டும் கருதாது நாட்டின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை கலைக்க வேண்டும்.

பாராளுமன்றம் கலைக்கப்படாமல் இருந்தால் எமக்கு மாத்திரமின்றி ஐக்கிய தேசிய கட்சிக்கே பாதிப்பு அதிகம் உள்ளளதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

மாத்தறை தினகரன் நிருபர்

Thu, 02/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை