உதவி பொருட்களை பெறுவதில் நெரிசல்: நைகரில் 20 பேர் பலி

நைஜர் நாட்டில் அகதிகளுக்காக வழங்கப்பட்ட உதவிப் பொருட்களைப் பெறத் திரண்ட கூட்ட நெரிசலில் மிதிபட்டு பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 20 பேர் உயிரிழந்தனர்.

நைஜர் நாட்டின் டிபா நகரம் நைஜீரியா மற்றும் சாட் நாடுகளின் எல்லையோரத்தில் உள்ளது. இங்கு பொக்கோ ஹரம் ஆயுதக் குழுவின் தாக்குதலுக்கு உள்ளாகும் நைஜீரிய அகதிகள் மற்றும் சொந்த நாட்டிலேயே வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சம் புகுந்தவர்கள் உள்ளிட்ட 2 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநில ஆளுநர் சார்பில் அகதிகளுக்கு உணவு மற்றும் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன. அவற்றைப் பெற மக்கள் முண்டியடித்ததில் நெரிசல் ஏற்பட்டது. அப்போது தடுமாறி விழுந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்களை மற்றவர்கள் மிதித்துக்கொண்டு ஓடியதில் 20 பேர் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

உதவிப் பொருட்களை வழங்கும் கலாசார மற்றும் இளைஞர் மத்திய நிலைய முற்றவெளி மற்றும் அதற்கு அருகில் ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டுள்ளனர். அந்த மத்திய நிலையத்தின் வாயில் கதவுகள் திறக்கப்பட்ட உடன் கூடியிருந்தவர்கள் முண்டியடித்தபோதே நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Wed, 02/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை