தடுப்பு முகாமில் சிக்கிய சீன முஸ்லிம்கள் விபரம் அம்பலம்

தாடி வளர்ப்பது, முகத்தை மறைக்கும் பர்தா அணிவது மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவது போன்ற காரணங்களுக்காக சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்படும் தகவல்கள் கசிந்துள்ளன.

சீனாவெங்கும் உள்ள கடும் பாதுகாப்புக் கொண்ட தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்காக முஸ்லிம்கள் தொடர்பான விபரங்கள் கசிந்திருக்கும் புதிய ஆவணத்தில் உள்ளது. சீனாவில் மத நம்பிக்கைக்காக துன்புறுத்தல் மற்றும் தண்டனை வழங்கப்படுவதற்கான வலுவான ஆதாரமாக இந்த ஆவணம் உள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தெற்மேற்கு சின்ஜியானைச் சேர்ந்த உய்குர் மக்களின் தனிப்பட்ட விபரங்கள் தொடர்பில் 137 பக்கங்கள் கொண்ட விரிவான ஆவணத்தை பி.பி.சி தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

சின்ஜியாங் பிராந்தியத்தின் மூலம் ஒன்றில் இருந்து இந்த ஆவணம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் ஹெல்சம் என்ற முதல் பெயரைக் கொண்ட 38 வயது பெண் பர்தா அணிந்ததற்காக தடுப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளார். 34 வயதான மெமெடோஹட் என்பவர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்ததற்காகவும், 28 வயதான நூமெமட் என்பவர் வெளிநாட்டு இணையதளம் ஒன்றுக்குள் நுழைந்ததற்காகவும் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Wed, 02/19/2020 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக