15 வயதில் அரைச்சதம்: நேபாள வீரர் சாதனை

நேபாள அணியின் பதின்ம வயது வீரரான குஷால் மல்லா ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இளம் வயதில் அரைச்சதம் பெற்றவராக சாதனை படைத்துள்ளார்.

கத்மண்டுவில் சனிக்கிழமை நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது கன்னி ஆட்டத்தில் களமிறங்கிய 15 வயது மற்றும் 340 நாட்கள் கொண்ட மல்லா 51 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் அவர் தனது சக அணி வீரரான ரோஹித் குமார் பவுடலின் சாதனையையே முறியடித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டியில் பவுடல் தனது 16 வயது 146 நாட்களில் 55 ஓட்டங்களை பெற்று சாதனை படைத்தார்.

Mon, 02/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை