1000 போட்டிகளில் ஆடி ரொனால்டோ சாதனை

நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் ரொனால்டோ ஆயிரம் போட்டிகளில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார்.

35 வயதான பிரபல கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்டதன் மூலம் தனது 1,000 ஆவது அதிகாரபூர்வ போட்டியை பதிவு செய்துள்ளார்.

இத்தாலி கால்பந்து கழக அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் போட்டிகளில் ஜுவன்டஸ் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஸ்பேல் அணிக்கெதிரான போட்டியில் ஒரு கோல் அடித்ததன் மூலம், 724 கோல்கள் அடித்த பெருமையினை பெற்றார்.

மேலும் இந்த போட்டியில் ஜுவன்டஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் சீரி ஏ தொடரில் தொடர்ந்து 11 கோல்கள் அடித்து, கேப்ரியல் ஓமர் பாடிஸ்டுடா மற்றும் பேபியோ குவாக்லியாரெல்லா ஆகியோருடன் தனது சாதனை பகிர்ந்துகொண்டார்.

Mon, 02/24/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை