அரச குடும்பத்தை துறந்தது தொடர்பில் ஹரி விளக்கம்

இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வேறு வழியின்றி விலகியதாக ஹரி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

லண்டனில் நடந்த விருந்து ஒன்றில் பங்கேற்று பேசிய ஹரி, அரச குடும்பத்தில் இருந்து விலகியது தொடர்பாக முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

தானும் தனது மனைவி மேகனும் மிகுந்த வருத்தத்துடன் அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியதாகவும் அதே சமயம், மனைவி மற்றும் மகன் ஆர்க்கியுடன் மிகவும் அமைதியான வாழ்க்கையை தேடுவதற்கு தனது அரச பதவியை கைவிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் ஹரி கூறினார்.

“அரச குடும்பத்தின் பொறுபிலிருந்து விலகுவதாக நான் எடுத்த முடிவு சாதாரணமாக எடுக்கப்பட்டது இல்லை. பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை மற்றும் பல வருட போராட்டங்களுக்குப் பின்னர் எடுக்கப்பட்ட முடிவு இது. நான் எடுத்த முடிவுகள் எப்போதும் சரியானது என்று நான் கூறவில்லை ஆனால் இந்த விடயத்தில் வேறு வழியில்லை” என்று ஹரி தெரிவித்தார்.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை