2,153 செல்வந்தர்களின் சொத்து 4.6 பில். மக்களை விட அதிகம்

உலகின் பெரும் செல்வந்தர்கள் 2,153 பேரின் ஒருங்கிணைந்த சொத்து மதிப்பு 4.6 பில்லியன் ஏழை மக்களின் சொத்தை விட கடந்த ஆண்டில் அதிகமாய் இருந்ததாக ஒக்ஸ்பாம் அறநிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் சம்பளம் பெறாமல் பெண்களும் சிறுமிகளும் செய்யும் வேலையின் மதிப்பு தொழில்நுட்பத் துறையை விட 3 மடங்கு அதிகம். எவ்விதச் சம்பளமும் அங்கீகாரமும் இன்றி அந்தப் பெண்கள் ஒவ்வொரு நாளும் ஒருங்கிணைந்து சுமார் 12.5 பில்லியன் மணி நேரம் வேலை செய்கின்றனர்.

அத்தகைய பெண்களின் பொருளாதார பங்களிப்பு ஆண்டுதோறும் குறைந்தது 10.8 டிரில்லியன் டொலர் என மதிப்பிடப்படுகிறது.

பொருளாதாரத்தின் மறைமுக உந்துசக்தியாகப் பெண்கள் விளங்குகின்றனர். அதனை வெளிக்கொணர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஒக்ஸ்பாம் தலைமை நிர்வாக அதிகாரி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

ஆபிரிக்கக் கண்டத்தில் வசிக்கும் அனைத்து பெண்களிடம் இருக்கும் சொத்து மதிப்பு, உலகளவில் 22 பெரும் பணக்காரர்களிடம் இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

ஒரு வீதமான உலகச் செல்வந்தர்கள் அடுத்த 10 ஆண்டுகளுக்காக தமது சொத்தில் 0.5 வீதம் கூடுதல் வரியை செலுத்தினால் அது முதியோர் மற்றும் சிறுவர் பராமரிப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் 117 மில்லியன் புதிய வேலைவாய்ப்புகளுக்கு தேவையான முதலீட்டுக்கு சமமானதாக அமையும் என்று ஒக்ஸ்பாம் குறிப்பிட்டுள்ளது.

Tue, 01/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை