பூமியில் பழமையான விண்கல் தாக்கிய பள்ளம் கண்டுபிடிப்பு

உலகில் விண்கல் தாக்கி ஏற்பட்ட மிகப் பழமையான பள்ளம் ஒன்றை அவுஸ்திரேலியாவில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் பனி யுகம் ஒன்றில் இருந்து எவ்வாறு வெளியேறியது என்பது பற்றி இதன்மூலம் தடயங்களை பெற முடியும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மேற்கு அவுஸ்திரேலியாவின் யரபுப்பாவில் சுமார் 2.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தாக்கிய விண்கல்லால் பாரிய பள்ளம் தோன்றி இருப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தத் தளத்தின் பாறைகளில் உள்ள கனிமங்களை ஆய்வு செய்தே ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

குறித்த யுகத்தில் பூமி வெப்பமடைந்த சம்பவத்துடன் இது தொடர்புபட்டிருக்கலாம் என்று நம்பப் படுவதால் விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்புக் குறித்து அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

இந்த உலர் நிலப்பகுதியில் 1979 ஆம் ஆண்டு இந்தப் பள்ளம் கண்டுபிடிக்கப்பட்டபோதும் அது எத்தனை பழமையானது என்பது பற்றி புவியியல் ஆய்வுகள் நடத்தப்படாமலேயே இருந்து.

பில்லியன் ஆண்டுகளாக நிகழும் நில அரிப்பு காரணமாக வெறுங்கண்களுக்கு இந்த பள்ளம் தென்படுவதில்லை. எனினும் தடயங்களைக் கொண்டு தாக்கம் ஏற்பட்ட பகுதி 70 கிலோமீற்றர் விட்டம் கொண்டது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

Thu, 01/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை