கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு தலைமை பொறுப்பு ஒப்படைப்பு

14 ஆவது அனைத்து பல்கலைக்கழக விளையாட்டு விழா

இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் விளையாட்டு சம்மேளனத்தின் பொறுப்பு இத்தடவை கிழக்குப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்ற பல்கலைக்கழக விளையாட்டு விழாவிற்கான பொறுப்பினை ஏற்கும் சம்மேளனத்தின் புதிய நிருவாகத் தெரிவிற்கான பொதுக்கூட்டம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு- வந்தாறுமூலை வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாட்டிலுள்ள 14 பல்கலைக்கழகங்களையும் உடற்கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட 95 அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதற்கிணங்க இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் 14 ஆவது விளையாட்டுவிழா 2022 ஆம் ஆண்டில் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சம்மேளனத்தின் புதிய தலைவரும் தாவரவியல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி சந்திரகாந்தா மகேந்திரநாதன் தெரிவித்தார்.

இலங்கை அனைத்து பல்கலைக்கழகங்களின் விளையாட்டு சம்மேளனத்திற்கான பொறுப்புக்களை வடக்கு , கிழக்கு மாகாணங்களிலுள்ள பல்கலைக் கழகம் ஒன்று ஏற்றுக்கொள்வது இதுவே முதல் தடவையென சுட்டிக்காட்டப்படுகிறது.

கடந்த காலங்களில் நிலவிய அசாதாரண சூழ்நிலையினால் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எந்வொரு பல்கலைக்கழகமும் விளையாட்டு விழாவிற்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது. விளையாட்டு சம்மேளனத்தின் புதிய செயலாளராக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்விப் பணிப்பாளர் றோஹினி அன்டனி புவனசிங்கம் தெரிவு செய்யப்பட்டார்.

பல்கலைக்கழகங்களின் 13 ஆவது விளையாட்டுவிழா கடந்தவருடம் றுகுனு பல்கலைக்கழகத்தில் குறிப்பிடத்தக்கது.

ஏறாவூர் குறூப் நிருபர்

Sat, 01/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை