வாழ்க்கைச்செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

வாழ்க்கைச் செலவு சுட்டெண்ணுக்கு ஏற்ப அரச அதிகாரிகளினதும் ஓய்வுபெற்றோரினதும் சம்பளங்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்ற ஓய்வுபெற்றவர்களின் தொழிற்சங்க கூட்டமொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சௌபாக்கியத்தின் எதிர்கால நோக்கு என்ற தேசிய கொள்கையில் குறிப்பிட்டுள்ளவாறு வாழ்க்கை செலவு சுட்டெண் அதிகரிப்புக்கு ஏற்றவாறு அரச ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெறுவோரின் சம்பளமும் அதிகரிக்கப்படும். இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கை ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது.

தற்போது நாட்டில் 6 இலட்சத்து 40 ஆயிரம் ஓய்வுபெற்றோர் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் சுமார் 25 ஆயிரம் பேர் இதில் மேலும் இணைகின்றனர். இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் 19 ஆயிரம் மில்லியன் ரூபாவை செலவிடுகிறது. நாட்டுக்காக அரச ஊழியர்கள் வழங்கிய சேவைக்கு பிரதியுபகாரமாக அரசாங்கம் இதனை வழங்கி வருகிறது என்று இராஜாங்க அமைச்சர் அங்கு மேலும் கூறினார்.

Mon, 01/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை