நெல் உற்பத்தியாளர்களுக்கு சிறுபோகம் முதல் இலவச உரம்

நெல் உற்பத்தியாளர்களுக்கு இந்த ஆண்டு சிறுபோகம் முதல் இலவசமாக உரம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய விவசாயி ஒருவருக்கு ஆகக்கூடியது 02 ஹெக்டயர் நிலப்பரப்புக்கு தேவையான யூரியா, சுப்பர் பொஸ்பேட்(ரி.எஸ்.பி), மியூரியெட் ஒவ் பொட்டாஸ் (எம்.ஓ.பி) ஆகிய உர வகைகள் சிபாரிசு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் கூறுகையில்,

நாட்டில் தற்போது நிலவும் உர பற்றாக்குறை தொடர்பில் பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து உரம் இறக்குமதி செய்வோருக்கு கடந்த அரசாங்கம் 6 தொடக்கம் 9 பில்லியன் ரூபா நிதியை கொடுக்க தவறியமை காரணமாகவே நாட்டில் திடீரென்று உரப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

எனினும் பிரதமரின் வழிகாட்டலுக்கமைய திறைசேரி உர இறக்குமதியாளர்களுக்கு 03 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. அத்துடன் உரப் பற்றாக்குறைக்கு தீர்வு கிட்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன்

Fri, 01/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை