ஊழல் வழக்கு: நெதன்யாகு சட்ட விலக்குக் கோரினார்

தம் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இருந்து பாராளுமன்ற சட்ட விலக்குக் கோருவதற்கு இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார்.

இதன்மூலம் வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் புதிய தேர்தலுக்கு பின்னர் வரை இந்த வழக்கை பிற்போட வாய்ப்பு உள்ளது.

சட்டமா அதிபர் மூலம் பிரதமர் நெதன்யாகு மீது கடந்த நவம்பர் மாதம் மூன்று வெவ்வெறு சம்பவங்களில் ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கைத் துரோக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டன.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் நெதன்யாகு, தன் மீது சட்டவிலக்குப் பெற பாராளுமன்றத்தில் பாதிக்கும் அதிகமான எம்.பிக்களின் ஆதரவு தேவையாக உள்ளது.

இஸ்ரேலின் நீண்ட கால தலைவராக பதவி வகிக்கும் நெதன்யாகு செல்வந்த வர்த்தகர் ஒருவரிடம் பரிசில்களை ஏற்றது மற்றும் சாதகமான ஊடக அனுசரணையை பெறுவதற்கு முயற்சித்தது குறித்து குற்றம்சாட்டப்படுகிறது.

சட்ட விலக்கிற்கான விண்ணப்பம் காலாவதியாவதற்கு நான்கு நிமிடங்கள் இருக்கும்போதே நெதன்யாகு அது பற்றிய கோரிக்கையை விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் ஓர் ஆண்டுக்குள் மூன்றாவது பொதுத் தேர்தலே வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ளது.

Fri, 01/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை